ஷில்லாங்: மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் கான்ராட் சங்மா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன்.
5 நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களது உடல்நிலையை கண்காணித்து, தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.