ப சிதம்பரத்துக்கு அளிக்கப்படும்  சிகிச்சைக்கு குடும்பத்தினர் அதிருப்தி

Must read

டில்லி

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு திகார் சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையில் தங்களுக்கு அதிருப்தி உள்ளதாக அவர் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மீது சிபிஐ முதல் தகவலறிக்கை., பதிவு செய்தது.  அதன் பிறகு  2018-ம் ஆண்டு, சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது.  இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேடி ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சிபிஐ., சிதம்பரத்தைக் கைது செய்தது.

தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருவதுடன், அவரின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்று டில்லி உயர்நீதி மன்றம் சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, உத்தரவிட்டது. இன்று சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

செய்தியாளர்களிடம் இன்று சிதம்பரத்தின் குடும்பத்தினர், ”சிதம்பரம் சிறையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் எங்களுக்குத் திருப்தி இல்லை   சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டது முதல் இதுவரை 8 முதல் 9 கிலோ உடல் எடை குறைந்துள்ளார்

எனவே அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட வேண்டும் கடந்த  2016-ல் அவருக்குச் சிகிச்சை அளித்த குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாகேஸ்வர ரெட்டிக்குத் தான் சிதம்பரத்தின் உடல்நிலை குறித்துச் சரியாகத் தெரியும். ஆகவே அவருடைய ஜாமின் மனு மீது டில்லி உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article