சென்னை:

ருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்  இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் வரும் 8ந்தேதி 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஓமந்தூரர் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ஜூலை 8-ல் (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதற்கிடையில், முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை ஜூலை 8-ம் தேதி மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்பில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.