சென்னை:
மழைக்கால மருத்துவ உதவிக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய எண்களை மருத்துவத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள் உட்பட தயாராக உள்ளன. கூடுதலாக, தமிழகம் முழுவதுமுள்ள 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 770 ஜீப் மருத்துவக் குழுக்கள் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கும் உடனடியாக செல்லும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
போதுமான மருந்துகள், பாம்புக்கடி, பூச்சிக்கடிக்கான மருந்துகள், ஐவி திரவங்கள், டெட்டனஸ் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவிக்காகப் பொதுமக்கள் பின் வரும் எண்களை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம்: 044 – 29510400, 044 – 29510500, 9444340496, 8754448477.
Patrikai.com official YouTube Channel