ஒரே அறையில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

போபால்:

த்தியப்பிரதேசம் மாநிலத்தில் காவலர் தேர்வு நடைபெற்றதில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே எஸ்சி, எஸ்டி என தேர்வர்களின் மார்பில் எழுதப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் கண்டங்களை எழுப்பிய நிலையில், தற்போது, தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒரே அறையில் உடற்தகுதி சோதனை நடத்தியுள்ள விவகாரம் மேலும்  சர்ச்சையை  அதிகப்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த வாரம்  நடைபெற்ற காவலர் தேர்வின்போது, உடல்தகுதி தேர்வுக்கு கலந்து கொண்டவர்களின் மார்பில் ஜாதிய முத்திரை எழுதப்பட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இந்நிலையில்,  உடற்தகுதியில் தேர்வானர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்காக ம.பி.மாநிலம் பிஹிந் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பெண் தேர்வாளர்களுக்கு உடற் தகுதி குறித்த மருத்துவ பரிசோதனை செய்ய பெண் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரே அறையில் ஒருபுறமும் ஆண்கள் உள்ளாடையுடனும், மற்றோரு புறம் பெண்களுக்கும்  ஆண் மருத்துவர்களே பரிசோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்களின் கை பிடித்து ஆண் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.