சென்னை:
2023-24 இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அரசு ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு என மூன்று வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியலில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா முதலிடம், தருமபுரியை சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவன் முருகன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அகில இந்திய கலந்தாய்வு 20ம் தேதி தொடங்குகிறது.