டில்லி

நீட் தேர்வில் அதிக மார்க் வாங்கியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து பின் அதிக விலைக்கு மருத்துவ இடங்களை விற்ற ஊழல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

முன்பு வியாபம் ஊழலில் நீட் தேர்வில் பல குழறுபடிகள் நிறைவேறியது தெரிந்ததே.  தற்போது அதே போல மருத்துவ கல்லூரிகள் அதிக விலைக்கு விற்கும் ஊழல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   இது பற்றிய விவரம் பின்வருமாறு :

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவரோ மாணவியோ உதாரணத்துக்கு உத்திரப் பிரதேசத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி விட்டு, அவரே மற்றொரு மாநிலமான பீகாரிலும் மெடிக்கல் சீட்டுக்கு விண்ணப்பித்து ஒரு இடத்தை புக் செய்து விடுவார்.   அதன் பிறகு அந்தக் கல்லூரியில் சேராமால் விட்டு விடுவார்கள்.  அந்த இடத்தை கல்லூரி நிர்வாகத்தினர் நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.

இதற்காக சில இடைத்தரகர்கள் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் இடையே செயல்பட்டு வருகிறார்கள்.   இதற்காக கல்லூரியைப் பொறுத்து ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை மாணவர்களுக்கு தொகை தரப்பட்டுள்ளது.   ஒரு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அந்த இடத்தில் சேரவில்லை எனில் அது நிர்வாக ஒதுக்கீடு இடமாகி விடும்.  அதை கல்லூரி நிர்வாகம் நல்ல விலைக்கு விற்று விடும்.

இந்த ஊழல் நாடெங்கும் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.   கலந்தாய்வின் போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு விதிமுறைகள் மாற்றப்பட்டால் இந்த ஊழலை தடுக்க முடியும் என சில கல்விஆர்வலர்கள் கூறுகின்றனர்.