முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஊடகங்கள் அரசின் அதிகாரபூர்வ குரலாக ஒலிக்கக் கூடாது, அவைகள் பொது மக்களின் காவலர்களாக தங்கள் கடமையை செய்ய வேண்டியதில் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, கருத்திற்கும் செய்திக்கும், அபிப்ராயத்திற்கும் விஷயத்திற்கும் இடையிலான வித்தியாசம் வேகமாக மங்கி வரும் வேளையில், ஊடக நிறுவனங்கள் தாங்கள் சமுகத்தின் காவலர்களாக இருக்க வேண்டுமென்ற நிலையை சமன் படுத்திக் கொள்ளக் கூடாது என்றார்.
அவை வெறுமென அரசின் குரலாக இல்லாமல், விஷயங்கள் முழுமையாக, ஒரு சார்பின் பயமின்றி, பிடிவாதமின்றி விவாதிக்கப்படவும், அதனால் கருத்துக்கள் சரியாக தெரிக்கப் படவுமான தங்களது பங்களிப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் கருத்துரைத்தார்.
மேலும் அவர், இதில் மிகவும் கவலை தரும் விஷயம் ஊடக நிறுவனங்கள் தங்களது வருவாய் நோக்கத்திற்காக பணம் செலுத்தி செய்தி வெளியிடும் முறையை கையாள்வதாகும். இதனால் செய்தியை அதன் உண்மை உருவிலிருந்து வேறு கோணத்தில் காட்டப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது அவர்கள் தங்க:ஐத் தாங்களே சரி செய்து கொள்ள வேண்டிய ஒரு நிலையாகும் என்றார்.
இன்று இந்த தேசம் பல நெருக்கடியான சவால்களை எதிர்கொண்டு வருகிற நிலையில் அதிரடி செய்தியென்று தலைப்பிட்டு தருவதும் அதன் அழுத்தத்தில் சமூக ஊடகங்களில் விவாதங்கள் தொடங்குவதும் நடந்து வருகிறது இந்த சூழலில் ஊடகங்கள் உண்மையின் ஒரே ஒரு திறவுகோல் தாமே என்ற பார்வையிலிருந்து திரும்பி விடக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
”ஊடகங்கள் எதுவும் சரியாக இல்லை என்று இந்த சூழ்நிலையில் நான் சுட்டிக் காட்டாமல் விட்டால் நான் ஒரு இந்தியக் குடிமகன் என்ற அடிப்படையில் என் கடமையை நான் செய்யத் தவறியவனாகி விடுவேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
பொது ஊடகத் தன்மை என்பது; தேர்வு, ஒத்து ஊதுதல், ஒருசார்பு, கருத்தமைப்பின் வெளியே, தூண்டப்பட்ட காட்சி அல்லது செய்தியாக்கல், ஒரு குழுவின் நோக்கங்களைத் திணித்தல் என்று இல்லை அப்படி ஆகிவிடவும் கூடாது என்றும் கூறினார்.
ஊடகத்தில் உள்ள ஒருவர் அவரது தனிப்பட்ட கொள்கை என்ன வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம், அல்லது அவரது பதவி என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால், அவர் செய்தியாக்கும் போது அதற்கு எந்த வண்ணமும் பூசாமல் இருக்க வேண்டுமென்றார் அவர்.
எப்போதும் ஒரு உயர்வான பொதுநீதியைக் கடைபிடிக்க வேண்டும். பரபரப்பு ஒரு உண்மையான கருத்தாக்கமிக்க செய்திக்கு மாற்றாகி விடாது. குறைகூறுதல் மறுக்க முடியாத ஒரு உண்மைக்கு மாற்றாகி விடமாட்டாது. ஒவ்வொரு முயற்சியிலும் அரசியல் மற்றும் பொருளாதர விஷயங்களும் சுதந்திரமான அபிப்ராயம் இல்லாது நிகழாத சூழலை நிச்சயப்படித்த வேண்டும்.
அவர் தனது கருத்தாக, ஊடகங்கள் ஆட்சிக்கு முன் தங்களது கேள்விகளை வைக்காது வெறும் செய்திகளை வைக்கும் போது கேள்வி எழுவதாகவும் குறைந்தபட்ச கேள்விகளையாவது முன்வைக்கும் போது எதுவும் அப்படியே நிறைவேற்றும் வழி தராமல் சிலர் கேள்வியெழுப்பும் வாய்ப்பையும் உருவாக்கித் தரும் என்றார்.
“இன்று ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் ‘பிரேக்கிங் நியூஸ்’ மற்றும் ஒரு உரையாடலின் உடனடி தலைப்புச் செய்திகளைத் தாண்டி முக்கியமான சவால்களை நாடு எதிர்கொள்கிறது. நீங்கள் தொடர்ந்து திறமையான பேச்சாளர்களாக இருக்க வேண்டும் என்றாலும், நீங்கள் ஒருபோதும் உண்மையெனும் தனித்துவமான தாயத்தை இழந்து விடக்கூடாது. இறுதியில், நீங்கள் தான் லட்சக்கணக்கான இந்தியர்கள் கருத்துதூன்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் பளிங்குப் பந்து“, என்று முகர்ஜி கூறினார்.