தான் தனிக்கட்சி துவங்கி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாக ரஜினி அறிவித்துள்ள நிலையில், அவரை அம்பலப்படுத்தப்போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ‘ரஜினியின் அறிவிப்பு வெற்று அறிவிப்புதான். கட்சி குறித்து வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை. ஏன் என்றால் அவர் படிப்பறிவில்லாதவர். ஊடகம் தான் அவரை ஊதிப்பெரிதாக்கிக் காட்டுகின்றன.
தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்கள் ரஜினியை.. அவரது அரசியலை நன்றாகவே புரிந்து கொள்வார்கள்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சியின் பெயரையும், வேட்பாளர்களையும் அறிவிக்கட்டும். நான் அவரை பற்றி அம்பலப்படுத்துகிறேன்’ ’ என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.