பி.எப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திர்சேகரன், எம்.பி.கார்த்தில் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மயூரன்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக் கிறார் நந்தன் சுப்பராயன்
பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ஜுபின் இசையமைக்க, குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுதியுள்ளார்.
இப்படத்தில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா, கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.