லக்னோ
மகா கும்பமேளாவில் பகதர்கள் மரணம அடைந்தத/ற்கு துயரடைந்ததாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்
தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இiது கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இல் 30 பேர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் எனவு தகவல் வெளியாகியுள்ளது. விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்ட எக்ஸ் தளத்தில்,
”பிரயாக்ராஜில் சங்கமத்தில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கின்றது. இதுபோன்ற நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையைப் பெற வேண்டும் ”
எனப் பதிவிட்டுள்ளார்.