லக்னோ
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாஜகவும் காங்கிரஸும் அரசியலமைப்பு சட்டத்தை பல முறை திருத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மாயாவதி அப்போது செய்தியாளர்களிடம்.
“பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அரசியலமைப்பின் நகல்களை காட்டுகிறார்கள். அவர்களின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருப்பதாகவே தெரிகிறது.
பா.ஜ.க.வும், காங்கிரசும் அரசியலமைப்பு சட்டத்தை பல்வேறு திருத்தங்கள் மூலம் சாதிய, வகுப்புவாத மற்றும் முதலாளித்துவ சட்டமாக மாற்றியுள்ளனர். இது அம்பேத்கரின் சமத்துவ மற்றும் மதச்சார்பற்ற அரசியலமைப்பு கிடையாது.
அரசியல் ஆதாயங்களுக்காக இந்திய அரசியலமைப்புடன் இவர்கள் விளையாடும் விதம் ஏற்புடையது அல்ல. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு சலுகைகள் வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அரசுகள் அமல்படுத்தவில்லை.”
என்று தெரிவித்துள்ளார்.