க்னோ

குஜன்  சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 69-வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். கொண்டாட்டத்துக்கு பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மாயாவதி செய்தியாளர்களிடம்,

”டெல்லி சட்டசபை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு உள்ளிட்ட முறைகேடுகள் இல்லாமல் நேர்மையாக நடந்தால், அதன் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும். பகுஜன் சமாஜ் கட்சி நல்ல வெற்றி பெறும்.

டெல்லியில் வசிக்கும் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த மக்கள், கொரோனா சமயத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அதை மனதில் வைத்து அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணி, சுயநலத்துக்காக அமைந்த கூட்டணி. அதற்கு எதிர்காலம் இலலை. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு மாற்று, எங்கள் கட்சிதான்’

என்று கூறியுள்ளார்.