லக்னோ: பட்டியலிடப்பட்ட சாதியினருக்குள் (எஸ்சி) துணை வகைப்பாட்டை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தெளிவற்றது என்றும்,  அது எந்த தரத்தையும் அமைக்கவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவற்றது
  • நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
  • இந்த தீர்ப்பு  கோடிக்கணக்கான தலித்துகளின் நிலையை மோசமாக்கும்.

“பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆகஸ்டு 1ந்தேதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்த வரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் இந்த தீர்ப்பின்மூலம் உறுதியாகியுள்ளது.  இதற்கு வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் கொடுத்துள்ள கிரிமிலேயர் தொடர்பான தகவல் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,   உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்று  பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் முதலமைச்சர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாகவே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர்.  இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்,  அவர்களுக்கிடையில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவதுபோல அமைந்துள்ளது. இது  சரியானது அல்ல.  பட்டியலிடப்பட்ட சாதியினருக்குள் (எஸ்சி) துணைப் பிரிவை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தனது கட்சியின் எதிர்ப்பைத் தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தத் தரத்தையும் அமைக்காததால் அது தெளிவற்றதாக இருந்தது. ​​”எஸ்சி மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) மக்கள் துணை வகைப்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது, எங்கள் கட்சி அதை ஏற்கவில்லை” என்று மாயாவதி கூறினார். இதன்மூலம் பட்டியலின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை அரச சட்டரீதியாகவே  ஒழிக்கமுயல்கிறது. அதில் தற்போது பாதி வெற்றியும் கண்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்றவர், உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியதுடன், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு  கோடிக்கணக்கான தலித்துகளின் நிலைமையை மோசமாக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.