புதுடெல்லி: இந்திய தலைநகரில் சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட கடும் வன்முறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; நாடாளுமன்றத்தில், ஒருநாள் அனைத்து நிகழ்வுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு டெல்லி வன்முறை தொடர்பாக வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

விவாதம் மூலம் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் அது துரதிஷ்டவசமானது. மேலும், 1984 சீக்கிய கலவரத்தைப் போன்று டெல்லி வன்முறையும் நாட்டை உலுக்கியுள்ளது” என்றார் மயாவாதி.

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது, சிஏஏ ஆதரவாளர்கள் என்ற பெயரில், இந்துத்துவா குழுவினர், வடகிழக்கு டெல்லிப் பகுதியில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 50ஐ நெருங்கி வருகிறது மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 200க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. பலநூறு கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.