டெல்லி: பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது, பெண்களுக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருத்து தெரிவித்து உள்ளது.

பணியிடங்களில், வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு  வழங்க வேண்டும் சில அமைப்புகள் மற்றும் பல பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே பெண்களுக்கு பேறுகால விடுப்பு ஓராண்டுவரை சம்பளத்துடன் கூடியி விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாதவிடாய் கால விடுப்பு குறித்து பெரு நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள்,  இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. இதுதொடர்பாக மனுதாரர்கள், பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கைகளை வைக்கலாம்  என கூறியது.

மேலும்,  இதுபோன்ற  காரணங்களுக்காக பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், பணியிடங்களில் அவர்களை ஒதுக்கிட வழிவகுத்துவிடும். இதை நிறுவன முதலாளிகள் தடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு பணி வழங்கப்படுவதும் குறையும் வாய்ப்பு உள்ளது.  இதுபோன்ற நடவடிக்கைகளால்,  பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற கொள்கையானது பெண்களை அதிக அளவில் பணிபுரிய ஊக்குவிக்கும் அதே வேளையில், பெண்களை பணியமர்த்துவதில் இருந்து முதலாளிகளை ஊக்கப்படுத்துவது எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று ஒப்புக்கொண்டது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் விரிவான கொள்கையை உருவாக்க சம்பந்தப்பட்ட  மனுதாரர்கள் மத்தியஅரசு  மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் கொள்கையானது பெண்களை தொழிலாளர் தொகுப்பில் அதிக அளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் அதே வேளையில், அதன் மறுபக்கமாக, பெண்களை அதன் பணியாளர்களில் ஈடுபடுத்துவதில் இருந்து முதலாளிகளைத் தடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.