டில்லி:

5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (6ந்தேதி) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

இந்த தேர்தலில்,  நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்து உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  போட்டியிடும் அமேதி தொகுதி மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதி உள்பட நாடு முழுவதும்   51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

17வது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வரும் 6ந்தேதி 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்). ஜார்கண்ட் (4 தொகுதிகள்), மத்திய பிரதேசம (7 தொகுதிகள்), ராஜஸ்தான் (12 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (7 தொகுதிகள்) என 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடுகின்றனர். அதுபோல,  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, ஸ்மிரிதி இரானி போட்டியிடும் அமேதி, முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா போட்டியிடும் தாவ்ராரா, உத்தரபிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் நிர்மல் காத்ரி போட்டியிடும் பைசாபாத் ஆகிய தொகுதிகள் முக்கியமான தொகுதிகள்.

இந்த தொகுதிகள் உள்பட 51 தொகுதிகளிலும்  இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.