சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில்இ , ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு நடக்கும் நகரங்கள் பட்டியலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோன்று, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை என்டிஏ ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தேதியை தேசிய தோ்வு முகமை ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .அதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி முடிவடைந்துள்ளது. நிகழாண்டில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது.
,இதைத்தொடர்ந்து தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நீட் தேட்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தேசிய தேர்வு முகமையின் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான இளநிலை நீட் தேர்வு, மே 4ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வு, நாட்டின், 552 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில், 14 நகரங்களில் நடக்க உள்ளது.
இதற்கு விண்ணப்பித்தோர், தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரத்தை, தங்களின், ‘லாகின்’க்குள் சென்று அறியலாம். இது தேர்வு மையம் பற்றிய தகவல் மட்டுமே; நுழைவுச்சீட்டு பின்னர் வெளியிடப்படும்.
இதை தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், 011 – 4075 9000 மற்றும் 6922 7700 என்ற தொலைபேசி எண்ணிலோ, ‘neetug2025@nta.ac.in’ என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.