சென்னை: மே1 தொழிலாளர்கள் தினம் என்பதால், நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தொழிலாளர்களும், குடி மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மே 1ந்தேதி தொழிலாளர் தினம். இந்த தினம், தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் களை பேணும் வகையில், மே1ந்தேதி உலகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. நாளை மே 1ந்தேதி என்பதால், நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை அரசு விடுமுறை என்பதும் நாளை தொழிலாளர்களை வேலைக்கு அழைக்க கூடாது என்று தொழிலாளர் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக தொழிலாளர் தினம் நாளை (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.
அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூடம் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.