லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் மாதமே திரையிட தயாராக இருந்தது . கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூப்பட்டிருப்பதால் இந்த படம் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்டது .
இதனிடையே, தயாராகியுள்ள பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தப் பட்டியலில் அவ்வப்போது ‘மாஸ்டர்’ பெயர் இடம்பெறும். படக்குழுவினரோ ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்றே பதிலளித்து வந்தார்கள்.
https://twitter.com/XBbritto/status/1312673829353746432
இந்நிலையில் தளபதி விஜய்யின் மாஸ்டரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் விரைவில் வெளிவரும் என படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது சமூக ஊடக பக்கத்தில் இதை அறிவித்தார். அவர், “# மாஸ்டர் டீஸர் விரைவில் வரும்.” தளபதி விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்தாக வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.