இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

மாஸ்டர் படம் டப்பிங் செய்து இந்தியில் வெளியிடப்பட்டாலும், இப்படத்தை நேரடியாக இந்தியில் தயாரிக்க பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

கபீர் சிங் தயாரிப்பாளர், முராத் கெதானி மற்றும் எண்டெமால் ஷைன் ஆகியோர் இந்தியில் மாஸ்டர் படத்தை தயாரிக்கவுள்ளனர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை இந்தப் படத்தில் நடிக்க வைக்க, அவர்கள் ஆர்வமாக உள்ளார்களாம்.