தெலங்கானா: தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதுடன், அதன் காரணமாக தொழிற்சாலையில், ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அங்கு பணியில் இருந்த 34 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களின் உடல்நிலை கேள்விக்குக்குறியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் உள்ள பாஷமயிலரம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான, சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு வந்தது இந்த ஆலையில் நேற்று பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்து சிதறியபோது, அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் சுமார் 100 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டனர். இதனால் பலர் உடல்சிதறி உயிரிழந்தனர். சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஆலையில் 90-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தவலறிந்ததும் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தொடங்கினர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனர்.
இதில் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்த நிலையில், 2 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34-ஆக நேற்று இருந்தது. மேலும், மேலும் மருத்துவமனையில் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செவ்வாய்க்கிழமை காலை பார்வையிடுவார் என்று சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மா தெரிவித்துள்ளார்.