திஸ்புர்:

சாம் மாநிலத்தில் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட் டம் நடத்தப்படும் என்று அசாம் மாநில மாணவர் சங்கம் அறிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 10-ம் தேதி அசாமில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி  தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில், மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு (ஏஏஎஸ்யு -All Assam Students’ Union
) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பாக அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாந்தியில் ஜனவரி 10ந்தேதி தொடங்க உள்ள ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் செல்ல உள்ளார். அப்போது, மோடிக்கு எதிராக  மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அசாம் மாணவர் அமைப்பு (ஏ.ஏ.எஸ்.யூ) தலைவர் தீபங்கா குமார்நாத் தெரிவித்து உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அவர் முதல்முறையாக இங்கு வருகிறார். இந்த சட்டத்துக்கு மக்களிடையே  உள்ள எதிர்ப்பை காட்டும் வகையில் போராட்டம் நடைபெறும் என்றார்.

அதுபோல இதுகுறித்து கூறிய  மாணவர் சங்க தலைமை ஆலோசகர் சமுஜியால் குமார் பட்டாச்சாரியா, மத்திய பாரதிய ஜனதா அரசு அசாமின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டியவர்,  1971 மார்ச் 21-ந்தேதிக்கு பிறகு சட்ட விரோதமாக அசாமுக்குள் வந்த யாருக்கும் குடியுரிமை அளிக்கப்படக் கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றவர், எங்களது எதிர்ப்பை  பிரமாண்ட போராட்டம் மூலம் மோடிக்கு உணர்த்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.