சிலியின் சான் பெட்ரோ டி அட்டகாமா அருகே நேற்று (வியாழன்) அன்று 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிலி-அர்ஜென்டினா எல்லைப் பகுதியில் இன்று காலை 07:20 IST அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி ள்ளது. இந்த நிலநடுக்கமானது, பூமியில் இருந்து 128 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இது அந்நாட்டின் ஆன்டோஃபகஸ்தாவில் ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
சான் பெட்ரோ அடகாமா நகரின் தென்கிழக்கே பூமியில் இருந்து 128 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாதிப்பு விவரம் ஏதும் வெளியாகவில்லை.
இருப்பினும், “இந்த நிலநடுக்கத்தின் விளைவாக மக்களுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள், அடிப்படை சேவைகள் அல்லது உள்கட்டமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்” ஆகியவற்றை சரிபார்த்து வருவதாக SENAPRED ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “நான் ஏற்கனவே பிராந்திய பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டுள்ளேன், இதுவரை பெரிய சேதங்கள் பற்றிய அறிக்கைகள் எதுவும் இல்லை, ஆனால் குழுக்கள் தகவல்களை சேகரிக்கின்றன” என்று சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் தனது X தளத்தில் தெரிவித்து உள்ளார்.
சிலி பசிபிக் பெருங்கடலின் “நெருப்பு வளையத்தில்” இருப்பதால், அடிக்கடி எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்களுக்கு பெயர் பெற்ற நில அதிர்வு செயலில் உள்ள மண்டலத்தில் உள்ளது. ஏற்கனவே கடந்த 1960 இல் வால்டிவியாவில் 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட, பதிவு செய்யப்பட்ட சில சக்திவாய்ந்த பூகம்பங்களை நாடு அனுபவித்துள்ளது. 2010 இல், 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி 500 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.