டில்லி:

லைநகர் டெல்லி உள்ள சமூகநீதித் துறை அமைச்சக அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஏராளமான ஆவனங்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில்  சிஜிஓ வளாகத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் அந்த்யோத்யா பவன் வளாகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 5வது மாடியில், சமூகநீதித் துறை அமைச்சக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை  திடீரென தீ பிடித்தது. இதன காரணமாக பணிக்கு வந்த ஊழியர்கள் அலடியடித்து ஓடினர்.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்  24 வாகனங்களில் விரைந்து வந்து தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.  தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டிடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் ஏராளமான ஆவனங்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]