மணிலா: பிலிப்பைன்ஸில் மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அக்டோபர் 1ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் மின்டானோவ் நகரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த ஒரு வாரத்திற் முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம் செபு நகரில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 74 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கதுரு,
[youtube-feed feed=1]