
புதுடெல்லி: இந்தியாவின் பிரபல பெண் காலபந்து வீராங்கனை பாலா தேவி, தனக்கான ஊக்க சக்தி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்தான் என்றுள்ளார்.
ஐரோப்பாவில், முன்னணி லீக் அணியில் ஆடிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் பாலா தேவி.
இவர் கூறியுள்ளதாவது, “எனக்கான மிகப்பெரிய உந்து சக்தி மேரி கோம். அவர், மிக எளியப் பின்னணியிலிருந்து வந்த, தனக்கான தடைகள் பலவற்றை தகர்த்தெறிந்து, இந்த உயரத்தை இன்று எட்டியுள்ளார்.
அவர், பல சாதனைகளை தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். தான் ஒரு தாயாவதற்கு முன்பாக, நாட்டிற்காக பல சாதனைகளைப் புரிந்தவர்.
கடந்த 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது, அவரிடம் உரையாடினேன். அப்போது அவரின் உழைப்பை கவனித்தேன். அவர், மிகவும் நட்பான மனிதர் மற்றும் எங்களுக்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருந்தார்” என்றுள்ளார் அவர்.
ஸ்காட்டிஷ் பெண்கள் பிரீமியர் லீக் தொடரில், ரேஞ்சர்ஸ் அணிக்காக, சமீபத்தில் தனது முதல் கோலை அடித்தார் பாலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]