டில்லி

மாருதி வாகன நிறுவனம் தனது பயணிகள் வாகன உற்பத்தி நிறுத்தம்  குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விற்பனை சரிவின் எதிரொலியாக  2 தொழிற்சாலைகளில் வரும் 7ந்தேதி மற்றும் 9ந்தேதி முதல் வாகன உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக மாருதி நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் விற்பனை ஆகும் சிறிய வகை வாகனங்களில் மாருதி முன்னிலையில் இருந்தது. பலர் தாங்கள் வாங்கும் முதல்  வாகனத்தை மாருதி நிறுவனத்தில் இருந்து வாங்கி வந்தனர். எனவே பயணிகள் வாகனங்களில் அதுவும் சிறிய வாகனங்களில் மாருதி நிறுவனம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது.

மாருதி வாகன நிறுவன உற்பத்தி நிலையங்கள் குருகிராம் பகுதியில் அரியானா மாநிலத்தில் உள்ள மனேசர் பகுதியிலும் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அனைத்து வாகன விற்பனையும் சரிவைச் சந்தித்து  வருகின்றன. பல முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர். எனவே தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் வாகனங்கள் விற்காமல் தேங்கும் நிலை உண்டாகி இருக்கிறது.

இந்த விற்பனை சரிவு மாருதி நிறுவனத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. அதையொட்டி மாருதி வாகன நிறுவனம் தனது பயணிகள்  வாகன உற்பத்தியைச் செப்டம்பர் மாதம் 7 மற்றும் 9 தேதிகளில் முழுமையாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த இரு தினங்களும் உற்பத்தி இல்லா தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.