வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தை நாசா தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

1.8 கிலோ எடையுள்ள இந்த சிறிய ரக ஹெலிகாப்டர் நாசாவின் செவ்வாய் கிரக திட்டத்தில் இணைகிறது. இதன் காற்றாடி பூமியில் செயல்படும் சாதாரண ஹெலிகாப்டரின் காற்றாடியை விட 10 மடங்கு வேகமாக சுழலும் தன்மை கொண்டது.
நாசாவின் 2020ம் இலக்கு திட்டத்தில் இது முக்கிய பங்காற்றும். செவ்வாய் கிரகத்தில் இந்த ஹெலிகாப்டர் தனது சொந்த இலக்குடன் தான் பறக்கும். இதை அங்கு தயார்படுத்த விஞ்ஞாணிகளுக்கு 4 ஆண்டுகள் ஆகும். செவ்வாய் கிரகத்தில் பறந்த வாகனங்களில் இதுவே பளு கூடுதலான வாகனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel