அங்காரா: பாலியல் பலாத்காரம் செயலில் ஈடுபடும் ஆண்கள், அந்த பெண்களையே திருமணம் செய்து கொள்ளும் மசோதா துருக்கி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
துருக்கி நாட்டில் குழந்தை திருமணம் பரவலாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு காண அந்நாட்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக 2016ம் ஆண்டு, பாலியல் பலாத்காரம் செயலில் ஈடுபடும் ஆண்கள், அந்த பெண்களையே திருமணம் செய்து கொள்ளும் மசோதா கொண்டு வரப்பட்டது.
ஆளும் கட்சி கொண்டு வந்த சர்ச்சைக்குரிய இந்த புதிய சட்ட மசோதா கடும் எதிர்ப்பின் காரணமாக அப்போது திரும்ப பெறப்பட்டது.
இந் நிலையில் மீண்டும இதுபோன்ற ஒரு மசோதா கொண்டு வரப்படுகிறது. சர்ச்சைக்குரிய இந்த மசோதாவானது, நாட்டின் பெண்கள் உரிமை பிரச்சாரகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர் திருமணம் மற்றும் சட்டரீதியான பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்க எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி (எச்.டி.பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த மசோதா குறித்து ஐநா சபை கடுமையாக எச்சரித்துள்ளது. சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும், துயரங்களை ஏற்படுத்தும என்று கூறி இருக்கின்றன.