திருமணமான பெண்கள் எந்த குடும்பதத்தின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்க்க வேண்டும் ? என்ற விவாதம் சமூக வலைதளத்தில் வைரலானது.
பெண்கள் தங்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவரின் பெயரை முதல் எழுத்தாக வைத்துக்கொள்வது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது தங்கள் கல்விச் சான்றிதழில் உள்ளது போல் தந்தையின் பெயரை முதல் எழுத்தாக வைத்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கி பான்டூஸ்கோ வெளியிட்ட TikTok வீடியோவில், திருமணமான பிறகும் பெண்கள் தங்கள் குடும்ப பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் வைத்துக் கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இது வெளியிடப்பட்டதிலிருந்து, அவரது வீடியோவை 490,000 க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் 8,500 க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.
அதில் பலரும் திருமணமான பின்பு தங்கள் பெயருக்கு பின்னால் தாங்கள் பிறந்த குடும்பத்தின் பெயரை வைத்துக்கொள்வதும் கணவரின் குடும்ப பெயரை வைத்துக்கொள்வதும் அவரவரின் விருப்பம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், பெரும்பாலான தம்பதிகள் கணவரின் குடும்ப பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளும் பாரம்பரியத்தை இன்னும் கடைப்பிடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
79 சதவிகித பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் கணவரின் கடைசி பெயரை வைத்துக் கொண்டனர். அதேபோல் பெரும்பாலான ஆண்களும் தங்கள் கடைசி பெயரை வைத்துக்கொள்வதையே விரும்பியதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த நிலையில், பான்டூஸ்கோ வெளியிட்ட TikTok வீடியோ, திருமணமான பெண்கள் எந்த குடும்பதத்தின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்க்க வேண்டும் ? என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சில ஆண்கள், தங்கள் மனைவியின் குடும்ப பெயர் தங்களுக்கு பிடித்திருந்ததால் அவர்களின் பெயருக்கு பின்னால் அதை சேர்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
வேறு சிலரோ எனக்கு எனது கணவரின் குடும்ப பெயர் பிடித்திருந்தது ஆனால் எனது கணவருக்கு எனது குடும்ப பெயரை பிடித்திருந்தது நாங்கள் இருவரும் எங்களின் விருப்பப்படி பெயரை மாற்றிக்கொண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விவாதத்தை துவக்கிய ஆங்கி பான்டூஸ்கோவோ, திருமணமான பின் எனது தாயின் பெயருக்கு பின்னால் தாமஸ் என்று அவரது கணவரின் குடும்ப பெயரை வைத்துக்கொண்டார். ஆனால் அவர் திருமணமானதில் இருந்தே சந்தோசமாக இல்லை, அதனால் அவரது பெயருக்குப் பின்னால் இருக்கும் தாமஸ் என்ற பெயரை நீக்கப் போகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.