புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, வருவாய் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களில் 77% பேர், வழக்கமானதைவிட, குறைந்தளவே உணவு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

“அந்தப் பழங்குடிகளில் பலருக்கு, காட்டிற்குள் சென்று மூங்கில் சேகரிப்பதும், வெற்றிலைகளை சேகரிப்பதும்தான் பிரதான தொழில். அவர்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலம் இல்லை.

கொரோனா முடக்கம் காரணமாக, அவர்கள், காட்டிலிருந்து தாங்கள் சேகரித்தவற்றை விற்பனை செய்ய இயலாமல் போனது அவர்களால். ஏனெனில், சந்தைகள் எதுவும் செயல்படவில்லை. இதனால், அவர்களுக்கு வந்து கொண்டிருந்த சொற்ப வருவாயும் நின்றுபோனது” என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 11 மாநிலங்களில், பல்வேறு பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த 4000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா முடக்கத்திற்கு முன்பாக, தங்கள் உணவில் இறைச்சி, முட்டை போன்றவைகளைக் கொண்டிருந்த அம்மக்கள், தற்போது மிகச் சாதாரண உணவுக்கே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.