மராத்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கலை இயக்குநராக இருந்தவர் ராஜு சப்தே. அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொழிலாளர் சங்கத்தில் இருக்கும் ஒருவரின் தொல்லை தாங்க முடியாமல் ராஜு சப்தே தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு ராஜு, தனக்கு தொல்லை கொடுத்து வந்தவர் யார் என்பதை வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவும், தற்கொலைக்கு முன்பு ராஜு எழுதிய கடிதமும் கிடைத்துள்ளதாக சீனியர் இன்ஸ்பெக்டர் விவேக் முகலிகர் தெரிவித்துள்ளார்.