கொச்சி:

கேரள மாநிலம் கொச்சி மராடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ கோலி பெய்த் கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. சில நிமிடங்களில் அந்த கட்டிடம் தரைமட்டமாகும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உயர்வகுப்பு அடுக்கு மாடி குடியிருப்பில் 343 வீடுகள் இருந்தன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு எந்தவொரு விதிகளையும் கடைபிடிக்காமல் கட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கட்டிடத்தை இடிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.   அதைத்தொடர்ந்து, அந்த கட்டிங்கள் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  இன்று 2 குடியுருப்புகள் குண்டுவைத்து தகர்க்கப் பட்டது. மீதம் உள்ள 2 குடியிருப்புகள் நாளை வெடிவைத்து தகர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

கேரளாவில், கொச்சி, மாராடு கடற்கரை அருகே 343 வீடுகள் கொண்ட 4 உயர்ரக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஹோலிபெய்த், ஆல்பா ஷெரீன், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும்  கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, கட்டப்பட்டதாக, புகார் எழுந்தது.

இது குறித்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 350 இந்த வீடுகளை இடிக்கும்படி, கடந்த ஆண்டு (2019) மே மாதம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீடு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மராடு அடுக்குமாடி குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு இன்னும் கட்டிடத்தை இடிக்க இயலாத நிலை நீடித்தது. வீடுகளை காலி செய்ய மறுத்து, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, காங். மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பான புகார்களை அடுத்து, வீட்டின் உரிமையாளர்களை காலி செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம் கட்டிடத்தை உடனே இடித்துத் தள்ளவும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.  இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், வீடுகளை காலி செய்யும்படி, அவற்றின் உரிமையாளர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து காலி செய்தனர்.

இதையடுத்து  அந்த குடியிருப்புகளை குண்டு வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆலோ சனையின் பேரில் குண்டு வைத்து, அந்த கட்டிடத்தை உடைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

மொத்தம் உள்ள 4 குடியிருப்புகளில் ஹோலிபெய்த், ஆல்பா ஷெரீன் என்ற 2 குடியிருப்புகள் இன்றும், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் குடியிருப்புகள் நாளையும் தகர்க்க ஏற்பாடுகள் நடந்தது. கடந்த சில நாட்களாக 4 குடியிருப்புகளில் ஒவ்வொரு தளங்களிலும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டன.

இந்த நிலையில், நேற்று  சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் முன்னிலையில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

,இதையடுத்து  இன்று காலை 9 மணிக்கு ஹோலிபெய்த் அடுக்குமாடி குடியிருப்பை குண்டுவைத்து தகர்ப்பதற்கான பணிகள் தொடங்கியது. 9 மணிக்கு அந்த கட்டிடங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த கட்டிடங்களை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

காலை சுமார்  10.30 மணிக்கு முதல் எச்சரிக்கை அலாரமும்,  10.55 மணிக்கு 2-வது அலாரமும், 10.59 மணிக்கு 3-வது அலாரமும் ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சரியாக காலை 11 மணிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்தன. அதைத்தொடர்ந்து, 19 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தின் ஒவொரு தளங்களும் சுக்கல், சுக்கலாக நொறுங்கி விழுந்தன. சில நிமிடங்களில் வானுயர இருந்த அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமாகின.

சில வினாடிகளில் அந்த இடத்தில் குடியிருப்பு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. சிமெண்டு கழிவுகள் நிரம்பி கிடக்கும் இடம் போல் அந்த இடம் மாறியது. அதேசமயம் கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியேறிய தூசி பல கிலோ மீட்டர் தூரம் பறந்தது. தீயணைப்பு வீரர்கள் தூசி பறக்காமல் தடுத்து அணைத்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஆல்பாஷெரீன் என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது.

மீதம் உள்ள 2 குடியிருப்புகளும் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. நாளை காலை 11 மணி அளவில் ஜெயின் கோரல் கோவ் குடியிருப்பும், பிற்பகல் 2 மணிக்கு கோல்டன் காயலோரம் குடியிருப்பும் இடிக்கப்பட உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்படுவதை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் இருந்தனர்.

கட்டிடம் இடிக்கப்படும் காட்சி வீடியோ

வீயோ உதவி: thanks ANI