லண்டன்: மறைந்த அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மாரடோனா, கடந்த 1986 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தின்போது அணிந்திருந்த ஜெர்ஸி, ரூ.15 கோடிகள் வரை ஏலம் போகும் என்று கூறப்படுகிறது.
கடந்த 1986ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தில், காலிறுதிப் போட்டியில், இங்கிலாந்துடன் மோதியது அர்ஜெண்டினா அணி. அப்போட்டியின்போது, பறந்து வந்த பந்து, மாரடோனாவின் இடது கையில் பட்டு கோலுக்குள் சென்றது.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையாகவே, அதை ‘கடவுளின் கை’ என்று வர்ணித்தார் மாரடோனா.
அந்தப் போட்டி முடிந்தவுடன், தனது ஜெர்சியைக் கழற்றி, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹாட்ஜிடன் கொடுத்தார். தற்போது, அந்த ஜெர்சி, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் உள்ள தேசிய கால்பந்து மியூசியத்தில் உள்ளது.
அதை, அதன் உரிமையாளர் தற்போது எலத்தில் விடுவதற்கு முடிவு செய்துள்ளார். அப்படி ஏலம் விடப்பட்டால், அந்த ஜெர்சி ரூ.15 கோடிவரை விலை போகலாம் என்று கூறப்பட்டுள்ளது.