மும்பை: பிரதமர் நரேந்திரமோடி குறித்து எடுக்கப்பட்டுள்ள ‘பிரதமர் நரேந்திரமோடி’ என்ற வாழ்க்கைக் குறிப்பு படத்தில், தான் எந்தவித பாடலையும் எழுதவில்லை எனவும், தன் பெயர் அப்படத்தில் தவறாக இடம்பெற்றுள்ளது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் சமீர் தெரிவித்தள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லரில் ஏற்கனவே பாடலாசிரியர் ஜாவேத் அக்தரின் பெயர் இடம்பெற்றிருந்தபோது, “தான் இந்தப் படத்தில் எந்தவித பங்கையும் ஆற்றவில்லை. எனவே, எனது பெயர் எதற்காக இடம்பெற்றுள்ளது என்றே தெரியவில்லை” என மறுப்புத் தெரிவித்திருந்தார்.
அவரையடுத்து, தற்போது மற்றொரு பாடலாசிரியர் சமீரும், தன் பெயர், பட ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். “நான் இந்தப் படத்தில் எந்தப் பாடலையும் எழுதவில்லை. ஒருவேளை, அவர்கள் எனது பழைய பாடல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்களா? என்று தெரியவில்லை.
அப்படியிருப்பின், அதுகுறித்து இசைப் பிரிவு கவனமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அவர்களுக்கே எதுவும் புரியவில்லை” என்றுள்ளார்.
– மதுரை மாயாண்டி