டில்லி:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று எதிர்கட்சிகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் பழையபடி ஓட்டுச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றன. ஆனால், எந்திரத்தில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்கள் குறித்து ‘ஜன்தா கா ரிப்போர்ட்டர்’ என்ற இணைய இதழ் புலனாய்வு மேற்கொண்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்….
இந்த எந்திரத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கங்களை உடைக்க முடியுமா? என்பது குறித்த புலனாய்வு மேற்கொள்ள, தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுடப் தகவல்கள் கையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
தெரிந்தோ அல்லது தெரியாமலோ தேர்தல் ஆணையம் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளது. அதோடு உச்சநீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையம் தவறாக வழிநடத்தியுள்ளது.
அந்த மைக்ரோ சிங் தயாரிப்பு நிறுவனமான‘மைக்ரோசிப் இன்க்’ தகவலின்படி வாக்குப்பதிவு எந்திரத்தை முடக்கவும், தவறிழைக்கவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா நீதிமன்றத்தில் எ ந்திரத்தின் குறியீடு (மெஷின் கோட்) என்பது கம்ப்யூட்டர் மென்பொருளின் ஆதார குறியீட்டை (சோர்ஸ் கோட்) பகிர கூடியது என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த ஆதார குறியீடு பாதுகாப்பானது என்று தேர்தல் ஆணையம் வாதிடுகிறது. வாக்குப்பதிவு எ ந்திரத்தை முடக்கவோ, தவறிழைக்கவோ முடியாமல் பாதுகாக்கும் அம்சம் இடம்பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறி வருகிறது.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களில்…..
1. தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் இவிஎம் எந்த நெட்ஓர்குடனும் இணைக்கப்படவில்லை. இது தனித் தன்மை கொண்டதாகும். இது ஒரு முறை பதிவேற்ற கூடிய மென்பொருளை கொண்ட எந்திரம். இதை கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்த முடியாது. இன்டர்நெட் மற்றும எந்த நெட்ஒர்க்குடனும் இணைக்க முடியாது. இதை முடக்கவும் முடியாது.
2. இந்த எந்திரத்தில் மின்னணு முறையில் பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவறு செய்தல் மற்றும் மனிதனால் சூழ்ச்சி தனமாக கையாள முடியாது. மென்பொருள் ஒரு முறை மட்டுமே பதிவேற்றம் செய்ததாகும். அதனால் இந்த சிப்பை மாற்றி அமைக்கவோ அல்லது முடக்கவோ முடியாது.
3. வெற்றிகரமாக பொருத்திய பின் எந்திர குறியீடு மைக்ரோ கட்டுப்பாட்டாளரான தயாரிப்பாளரிடம் வழங்கப்படும். எந்திர குறியீடு மூலம் ஆதார குறியீட்டை படிக்க முடியாது. இந்த ஆதார குறியீடு மென்பொருள் குழுமத்தை தவிர வெளி நபர்கள் யாருக்கும் வழங்கப்படுவது கிடையாது.
4. ஆதார குறியீடு எப்போதும் சம்மந்தப்பட்ட எந்திரத்தில் கட்டுப்பாட்டுடன் சேமித்து வைக்கப்படும். அதிக £ரப்பூர்வ நபர்களால் மட்டுமே இதை பரிசோதனை செய்ய முடியும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைத்தின் இந்த உறுதியளிப்பையும், எந்திர தயாரிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவாத அம்சங்களுடன் அந்த ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள அந்த எந்திரத்தின் மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ சிப் இங்க்’ நிறுவனம் தங்களது தயாரிப்புகளான மைக்ரோ சிப், எம்சியூ, செமி கண்டக்டர்ஸ் உள்ளிட்ட பொருட்களை முடக்க முடியும். அதில் தவறு இழைக்கவும், மாற்றி அமை க்கவும் முடியும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
ஒரு முறை பதிவேற்றும் மென்பொரும் அல்லது சிப் ஆகியவையின் பதிவேற்றங்களை உடைக்க முடியாது என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால், ‘‘நேர்மையற்ற முறையிலும், சட்ட விரோத முறையிலும் குறியீட்டு பாதுகாப்பு அம்சங்களை மீற வாய்ப்பு உள்ளது. மைக்ரோ சிங் அல்லது செமி கண்டக்டர் போன்று எந்த பொருளையும் தயாரிப்பாளர் அதன் குறியீட்டு பாதுகாப்பு அளிக்க முடியும் என்று மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும்.
ஆனால், அந்த பாதுகாப்பை உடைக்க முடியாது என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அந்நிறுவனத்தில் குறியீட்டு கொள்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தரப்பில் தனது பொருளுக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, தேர்தல் ஆணையம் கூறுவது, ஆதார குறியீடு பாதுகாப்பானது. அது வெளிநாட்டு வியாபாரிகளுடன் ஒரு போதும் பகிர்வது கிடையாது என்று தெரிவித்துள்ளது. ஆனால், மென்பொருளை எந்திரத்தில் பதிவேற்றம் செய்ய ஆதார குறியீட்டை எந்திர குறியீடாக மாற்றி தயாரிப்பாளர் வசம் ஒப்படைத்துள்ளது.
அப்போது தான் மொத்தமாக மைக்ரோ சிப்கள் தயாரிக்கும் போது அதில் குறியீட்டை பதிவு செய்ய முடியும். இதை தான் மைக்ரோசிப் இங்க் நிறுவனம் அமெரிக்கா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆதார குறியீடும், எந்திர குறியீடும் ஒரே கம்ப்யூட்டர் மென்பொருளில் பிரதிபளிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதனால் இந்த விஷயத்திலும் தேர்தல் ஆணையத்தின் வாக்குறுதி தவறாக உள்ளது.
இதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுள்ளு நடக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.