
டில்லி
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் குணமடைந்து வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (வயது 62) உடல்நலமின்மை காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு கோவா சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். மீண்டும் உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையை ஒட்டி அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் உடல் நலம் தேறி வருவதாக மத்திய தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர், “அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் மனோகர் பாரிக்கருடன் பேசினேன். அவர் விரைவில் பூரண குணம் பெறவும் சீக்கிரமே கோவாவுக்கு திரும்பவும் வாழ்த்துகிறேன்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.
[youtube-feed feed=1]