பெங்களூரு
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை மோடி செய்த மாபெரும் தவறு என முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் இடையில் செய்தியளர்கள் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பல கருத்துக்கள் கூறினார்.
மன்மோகன் சிங், “மக்கள் தற்போது மோடி அரசின் பொருளாதார மேலாண்மை மீதும் வங்கி செயல்பாடு மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தற்போது பல மாநிலங்களில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாடு தவிர்க்கபட வேண்டியதாகும்.
கச்சா எண்ணெயின் அளவு சர்வதேச அளவில் குறைந்துள்ளது. ஆயினும் காரணம் இன்றி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவது தொடர்கிறது. மோடி செய்த இரு மாபெரும் தவறுகளல் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவை ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கம் ஆகிய இரண்டுமே ஆகும்.
இந்த மாபெரும் தவறுகளை மோடி தவிர்த்திருக்க வேண்டும். இதனால் நமக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுளது. இதனால் நமது சிறு குறு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.