டெல்லி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நல குறைவால் இன்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92.
அவருடைய மறைவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் நாளை ரத்து செய்யப்பட்டு உள்ளன. நாடெங்கும்ம் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.