டெல்லி:
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்கியது மோடி ஆட்சியில்தான் என்று பாஜக ஆதரவாளர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் மன்மோகன் ஆட்சிக் காலத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தானியர் துண்டித்தனரே.. அப்போது.
இதுபோல மன்மோகன் ஆட்சிக்காலத்தில் இருமுறை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நமது ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் அதை வெளியிடவில்லை.
இந்தத் தகவலை தெரிவித்திருப்பவர் கர்னல் ஹரிஹரன்.