2004-ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் ‘மன்மதன்’. ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்திருந்தார்கள். யுவன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் மார்ச் 19-ம் தேதி மீண்டும் வெளியாகவுள்ளது. முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

நந்திதி தேவி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் 150 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]