டெல்லி
நேர்மையான அரசியல் தலைவரான கெஜ்ரிவாலை சிறையில் அடைத்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என மனீஷ் சிசோடியா கூறி உள்ளார்
அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறைஇந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை இந்த ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி கைது செய்தது. கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஜாமீன் கிடைத்தது.
ஆயினும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்து அவருக்கு இன்று ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
டெல்லியின் முன்னாள் துணை முதல்வரான மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம்,
“கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவு ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரிய நிவாரணம். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம் மட்டுமல்ல, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகாரத்தை நிறுத்திக்கொள்ள நீதின்ன்றம் ஒரு பெரிய செய்தியையும் இதன் மூலம் கொடுத்துள்ளது.
இந்த உத்தரவு ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, யாரேனும் “சர்வாதிகாரத்தை” நாடினால், உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. கெஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்க பாஜக நினைத்தது, எனவே அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு சிபிஐ அவரை கைது செய்து பாஜகவின் நோக்கத்தை சிபிஐ நிறைவேற்றியது.
கெஜ்ரிவால் ஜாமீன் உத்தரவு பாஜக முகத்தில் ஒரு பெரிய அறை. மேலும் கெஜ்ரிவாலுக்கு உசநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் பாஜகவின் பொய் மலை இப்போது சரிந்துவிட்டது என்பதற்கு ஒரு சான்றாகும். கெஜ்ரிவால் போன்ற உறுதியான நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்காக நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்.”
என்று கூறி உள்ளார்.