டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம்  சென்று, நேரடி  ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்ய உள்ள  உள்ளது 6 நீதிபதிகளைக்கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் குழு.

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இரட்டை ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 22 அன்று மாநிலத்திற்கு  உச்சநீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் கொண்ட குழு மணிப்பூர் செல்கிறத. அப்போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவி மற்றும் மனிதாபிமான உதவிக்கான NALSA இயக்கத்தை முன்னெடுத்து செல்வதுடன்,  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மணிப்பூர் நிவாரண முகாம்களைப் பார்வையிட உள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான  மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்கள் இடைய மோதல் நீடித்து வருகிறது. இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் வெடித்த வன்முறை இன்று வரை தொடர்கிறது.

கடந்த  2023  ஆண்டு தொடங்கிய இந்த வன்முறை இன்றுவரை தொடர்கிறது. இந்த வன்முறையில்  இதுவரை 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதுடன், பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது.  ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.

2023  மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களின் இடையே வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டன. மொபைல் இணையத்திற்கான தடை செப்டம்பர் 23 அன்று நீக்கப்பட்டது. ஆனால், மீண்டும் வன்முறை வெடித்ததால், அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன.

இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டுவர மாநில பாஜக அரசு முயன்ற நிலையில், அதை நிறைவேறவில்லை. இதனால், பாஜக அரசு ராஜினாமா செய்தது. இதையடுத்து, அங்கு தற்பாது குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.  அங்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இருந்தாலும் வன்முறைகள் அவ்வப்பாது தொடர்கிறது.

பெரும்பான்மை இனக் குழுவான மெய்தேய் மக்களின் வெறியாட்டத்தால்,  குக்கி மக்களில் 40,000 பேர் இன்னும் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஆறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, மார்ச் 22 அன்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிடவும், நிலைமையை மதிப்பிடவும், சட்ட மற்றும் மனிதாபிமான ஆதரவை வலுப்படுத்தவும்  செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் இரட்டையர் ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 22 அன்று மாநிலத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் வகையில்,  இந்த குழு அங்கு செல்வதுடன், அங்கு நேரடி ஆய்வும் செய்கிறது.  இந்தக் குழுவில் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் ஆகியோர் அடங்குவர். இந்த குழுவின் நோக்கம், மணிப்பூரில்,  அமைதியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதையும், நீதி கிடைப்பதை உறுதி செய்வதுமே என்று தெரிவித்துள்ளது..உச்ச நீதிமன்றம் மணிப்பூர் நெருக்கடியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும், நீதிபதிகள் குழு அங்கு வரும்பாது, அது பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாக இருக்கும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீதிபதிகள் குழு, நிவாரண முகாம்களுக்கு வருகை தர அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.  அதன்படி,   மார்ச் 22ம் தேதி தொடர் வன்முறை யால் பாதிக்கப்பட்டுள்ள #மணிப்பூர் மாநிலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்கிறது.