மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 ம் தேதி முதல் வகுப்புக் கலவரம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையானது இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பெரும்பான்மையாக வாழும் மெய்ட்டி சமூகத்தினர் பழங்குடியினரை தொடர்ந்து தாக்கி வருவதாகவும் அவர்களுடன் இணைந்து அதே இடத்தில் இருப்பது ஆபத்தானது என்று மணிப்பூர் மாநில எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் “பழங்குடியினருக்கு தன்னாட்சி அதிகாரம் பொருந்திய ஒரு பகுதியை வரையறுத்து தரவேண்டும்” என்றும்
“மெய்ட்டி சமூகத்தினருடன் ஒரே பகுதியில் வசிப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது அப்படி இருப்பது சாவதற்கு சமம்” என்றும் அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.