இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மணிப்பூரில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவிற்கு சுகாதார பணியாளர்கள் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தமது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது:
எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.