சண்டிகர்:
பஞ்சாப் சட்டசபையில் பேசிய முதல்வர் அம்ரிந்தர் சிங், மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் சீன மொழியான ‘மாண்டரின் மொழி’ கற்பிக்கப்படும் என்று கூறினார்.
பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
பஞ்சாபில் மாநில சட்டப்பேரவையான விதான் சபாவில், கடந்த 20ந்தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டம் 28ந்தேதிவரை நடைபெறுகிறது.
இதற்கிடையில் கடந்த 24ந்தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 26ந்தேதி முதல் பட்ஜெட் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கல்வித்துறை குறித்த விவாதத்தின்போது, சீன மொழியான மாண்டரின் மொழி பஞ்சாப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்று மாநில முதல்வரான கேப்டன் அம்ரிந்தர் சிங் கூறினார்.
மேலும், இந்த மொழியான, மேல்நிலை வகுப்பில் படிக்க மாணவ மாணவிகளின் விருப்பத்தின் பேரிலேயே, விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.