திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறந்துள்ள நிலையில், இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சபரிமலை  அய்யப்பன் கோவில் நடை கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை  நவம்பர் 16ந்தேதி  மாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து அன்று காலை 1 முதல் 41  நாட்கள் தொடர்ந்து கோவில் நடை திறந்திருக்கும். இதைததொடர்ந்து,  வரும் ( டிசம்பர் ) 27ம் தேதி பிரதான மண்டல பூஜையுடன் நடை அடைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்து 2026 ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படுகிறது.

மண்டல பூஜையைத்தொடர்ந்து அய்யப்பன் கோவில்,  அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 முதல், 11:30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அதிகாலை 3:30க்கு கணபதி ஹோமம், 7:30க்கு உஷ பூஜை, 12:00-க்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், 12:-30க்கு உச்சபூஜை முடிந்து மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மதியம் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை, 6:30-க்கு தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இந்த காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து, இருமுடி கட்டி பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினசரி  80ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  நவம்பர் 17ந்தேதி முதல்  டிசம்பர் 16ந்தேதி வரை   27 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என தேவசம் போர்டு  தெரிவித்து உள்ளது.

இன்றும் 10 நாட்களே  மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் என்பதால்க,ள  பக்தர்கள் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை மண்டல பூஜை 2025-2026 சீசனில், மண்டல பூஜை நிறைவு நாளாக டிசம்பர் 27, 2025 அன்று கொண்டாடப்படும், அன்று மாலை கோயில் நடை அடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும்.

[youtube-feed feed=1]