ஒரே நேரத்தில் 52 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி சாதனை..
இந்தியா முழுக்க நீண்ட நாட்களுக்கு பிறகு சரக்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பிராந்தி கடைகளுக்கு படை எடுத்து வந்த குடிமகன்கள் பலர், சரக்கை வாங்கி செல்லவில்லை, பெட்டி, பெட்டியாக அள்ளி சென்றுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான கடைக்கு நேற்று காலையிலேயே வந்த ஒரு ஆசாமி 13 லிட்டர் மதுபானமும் (ஹாட் ட்ரிங்ஸ்) 35 லிட்டர் பீரும் வாங்கியுள்ளார். பில் எவ்வளவு தெரியுமா? 52 ஆயிரத்து 800 ரூபாய்.
அங்குள்ள மதுக்கடைகள், சரக்கு வாங்கினால் பில் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். ஒருவருக்கு 2.6 லிட்டர் மது அல்லது 18 லிட்டர் பீர் மட்டுமே ஒரு நாளில் கொடுக்கலாம் என்பது கர்நாடகத்தில் சட்டம்.
சட்டத்தை உடைத்து சரக்கு வாங்கி சென்ற போதை ஆசாமி, தனது ’பில்’ தொகையை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப,- இந்தியா முழுக்க அந்த ‘பில்’ இன்று வைரலாகி உள்ளது.
தகவல் அறிந்த கலால் துறையினர் மது விற்ற தனியார் கடையின் விற்பனையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்