உத்ரெசெட்
டச் நாட்டின் உத்ரெசெட் நகரிலுள்ள டிராம் ஸ்டேஷனில் இருந்து சென்ற டிராம் வண்டியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

டச் நாட்டின் புகழ் பெற்ற நகரமான உத்ரெசெட் நகரில் உள்ள டிராம் ஸ்டேஷனில் இருந்து சென்ற ஒரு டிராம் வண்டியில் இன்று காலை டச் நேரப்படி 10.45 மணிக்கு ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தோர் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
இந்திய நேரப்படி இன்று மாலை சுமார் 3.15 மணிக்கு இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இந்த நிகழ்வில் சிக்கி உள்ளவர்களை மீட்க 3 ஹெலிகாப்டர்கள் பணியில் உள்ளன
அவசர பணியாளர்கள் அங்கு செல்ல வசதியாக சாலைகளை காலியாக வைக்க காவல்துறை மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel